Friday, 2 January 2015

காரணகர்த்தாவாய் நீங்கள்!

வேர்  கொண்ட  விருட்சத்தில் ,
சிற்றிலையாய்  உதிதேன் ...

தனிமையின்  பரிச்சயத்தில் ,
நிமிடங்களை  கழித்தேன் ...

என்  கிளையை  பகிர்ந்தீர் ,
உடன்  உறவை  தொடர்ந்தீர் ...

தென்றல்  சாய்க்க, மௌனம்  முன்பு ,
மௌனத்திலும்  வார்த்தைகள்  இன்று ...

சாரல்  தீண்ட , சிலிர்ப்பு  முன்பு ,
வெதுவெதுப்பாய்  நின்   பாடல்கள்  இன்று ...

வானவில்  சாயம் , களிப்பு  முன்பு ,
சாயம்  வாய்த்த  புகைப்படங்கள்  இன்று ...

பூக்கள்  மலர , விசேஷங்கள்  முன்பு ,
விசேஷமாய்  மினன்சல்கள்  இன்று ...

உறக்கம்  தொல்லை , பசியில்  முன்பு ,
சந்திக்க  காணும்  கனவுகள்  இன்று ...

மயிலின்  நடனம் , மிஞ்சினோம்  முன்பு ,
திரையில்  அதன்  பதிப்புகள்  இன்று ...

மன  பெட்டிக்குள்  பாதுகாக்க ,
நிறைந்து  வழியும்  நினைவுகள் ...

ஏன்  மறந்தீர்  மறக்க  பயில்விக்க ?
திறந்த  வெளியாய்  ஏக்கத்துடன் ,
என்றும்  அன்புடன்  என்  இதயம் ...

IT'S NAZI TIME

Dedicated to the die-hard NAZZZZZZZI fan--my cutest friend


செவ்விதழ்  கொண்ட  வனரோஜாவாய் ,
சங்கமிதாய்  நடனத்தில்  கீர்தணையாய் ,
பெருமிதம்  கொள்ள  நீ  அஞ்சனாவாய் ,
நிள்ளதோடும்  குளிர்  வேணியாய்,
பிரியமான  என்  தோழியே ,,,,

பரதநாட்டியம்

நாதத்தின்  தாளத்திற்கு  நாடியாய்,
போரில்  திறன்  வெளிபாடிற்கு  மூலமாய் ,
பெண்ணின்  உடல்  நளினதிற்கு  ஆதியுமாய் ,
உணர்சிகளின்  பாவத்திற்கு  அந்தமுமாய் ,
தமிழரின்  முதல்  கலை  மூச்சை ,
என்றும்  என்றென்றும்  நீ  இருப்பாய் ......

வருகைபதிவேடு

அபாய  குறிப்பீடு  -உன்
வருகைக்கு  மதிப்பீடு !

வண்ணமாயம்



கருமையை  குழலிலும் ,
வெண்மையை  மனத்திலும் ,
மஞ்சளை  மேனியிலும் ,
செம்மையை  நெற்றியிலும் ,
கொண்டாள்  அன்று ,
அனைத்தையும்  விரல்  நகத்தில்  கொண்டாள்  இன்று ...

swiss

குபேரனே  கடன்  வாங்கும்,
கருப்பு  அணுக்கள்  கொண்ட  மூட்டை ..

கல்லூரி

பில்லைபருவத்தையும்
முதுமைபருவத்தையும்
பட்டமளிக்கும்  மேதை...