Tuesday, 17 February 2015

என்றும்போல் இன்றும் ஓர் நாள்


என்றும்போல் இன்றும்  ஓர்  நாள் ,
மாற்றங்கள்  என்ற  சாயலில்  இவைகளுடன் ,
காரணம்  காணலாக ,
மனம்  போதி  மரம்  நாட ,
சிந்தனை  சல்லடையாக ,
வலிகளின்  துணுக்குகள்  முன்னேறி   சென்றதே !

நிழல்  மட்டுமே  துணையாய்  கொள்கிறேன்  ,
எவ்விசைக்கும்  உயிர்  கொடுக்க   மறுக்கிறேன் ,
அதீத  செறிவுடன்  கண்மணியை  பதிக்கிறேன் ,
படித்த  பக்கங்களில்  பிடித்த  வரிகளை  நினைக்கிறன் ,
நிலவொளியில்  நின்  சுவடுகளின்  துணை  கொண்டேன் ,
இத்தனையும்  மாயமாக  மறைய  வேண்டுகிறேன் ,
புதுமையை  கேளேன் , கேட்கிறேன்  ஒன்றை ,
என்றும்போல்  இன்றும்  ஓர்  நாளை ! 

Monday, 2 February 2015

நெஞ்சம் பேசுதே...

அலைகளின் தொடுதலால்,
உள்வாங்கியதாய் தோன்றும்..
உன் கண்களின் தொடுதலால்,
உள்வாங்கினாய் என்னை...

பாறையின் பிடியில்,
சிறு செடியை கண்டேன்...
கை கோர்க்கும் நொடியில்,
அச்செடியாய் கண்டேன் என்னை...

பிறப்புகள் மாயை,
வெறும் கனவே என்றேன்,
கலைத்தாய் அந்நினைப்பை,
ஓர் சொல்லில்....