என்றும்போல் இன்றும் ஓர் நாள் ,
மாற்றங்கள் என்ற சாயலில் இவைகளுடன் ,
காரணம் காணலாக ,
மனம் போதி மரம் நாட ,
சிந்தனை சல்லடையாக ,
வலிகளின் துணுக்குகள் முன்னேறி சென்றதே !
நிழல் மட்டுமே துணையாய் கொள்கிறேன் ,
எவ்விசைக்கும் உயிர் கொடுக்க மறுக்கிறேன் ,
அதீத செறிவுடன் கண்மணியை பதிக்கிறேன் ,
படித்த பக்கங்களில் பிடித்த வரிகளை நினைக்கிறன் ,
நிலவொளியில் நின் சுவடுகளின் துணை கொண்டேன் ,
இத்தனையும் மாயமாக மறைய வேண்டுகிறேன் ,
புதுமையை கேளேன் , கேட்கிறேன் ஒன்றை ,
என்றும்போல் இன்றும் ஓர் நாளை !
No comments:
Post a Comment